
சின்னபுள்ளை தனமாக பாரதி கண்ணம்மா நடிகை செய்த காரியம்- வைரல் வீடியோவால் ரசிகர்கள் கலாய்!
பாரதி கண்ணம்மா சீரியல் விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
மேலும் இந்த சீரியலுக்கு என ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். மேலும், பாரதி கண்ணம்மா தொடரில் கண்ணம்மா என்கிற கதாபாத்திரத்தில் காதநாயகியாக நடித்து வருபவர் ரோஷினி.
மாடலிங் துறையை சேர்ந்த இவர் இத்தொடரில் எந்த ஒரு கவர்ச்சியும், ஆடம்பரமும் இல்லாமல் நடித்துவருகிறார். இவரின் நடிப்பு ரசிகர்களால் பெருமளவில் பராட்டப்பட்டது. இதனையடுத்து, ரோஷினி சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்.
தற்போது மால்களில் பொருட்களை எடுக்க பயன்படுத்தப்படும் டிராலியில் உட்கார்ந்து செல்வது போன்ற வீடியோவை வெளியிட்டு, எனது நான் சின்ன வயதிலிருந்தே இப்படி செல்ல வேண்டும் என ஆசைப்பட்டேன். அது நிறைவேறிவிட்டது என உற்சாகத்துடன் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.