24 வயது இளைஞரை திருமணம் செய்யும் 61 வயது பாட்டி... காதல் கதையின் சுவாரசியம் என்ன?
அமெரிக்காவின் ஜார்ஜியாவின் ரோம் நகரைச் சேர்ந்தவர் செரில் மெக்ரிகோர் மற்றும் குர்ஆன் மெக்கெய்ன். இவர்கள் தங்கள் திருமண நிச்சயதார்த்தத்தை இன்ஸ்டாகிராமில் அறிவித்தனர்.
குர்ஆன் மெக்கெய்ன் என்ற இந்த காதலருக்கு 15 வயதாக இருந்தபோது அவர் முதன்முதலில் செரில் மெக்ரிகோர் சந்தித்தார். கடந்த ஆண்டு வரை தங்களுக்கு இடையே காதல் உணர்வுகள் இல்லை என்று இருவரும் கூறினர்.
37 வயது வயது இடைவெளி இருந்தபோதிலும் திருமணம் செய்துக் கொள்ள முடிவெடுத்து விட்ட இவர்கள், "நாங்கள் ஒரு ஆன்மீக உணர்வில் இணைந்தோம்" என்று சொல்கிறார்கள்.
மேலும், செரிலுக்கு 17 பேரக்குழந்தைகள் உள்ளனர். இவர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் காதலை பகிர்ந்து வருகின்றனர்.