டிக்டாக் பெண் பிரபலத்தை 400 பேர் சேர்ந்து மானபங்கம் செய்த அதிர்ச்சி வீடியோ! கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட பிரதமர்!

டிக்டாக் பெண் பிரபலத்தை 400 பேர் சேர்ந்து மானபங்கம் செய்த அதிர்ச்சி வீடியோ! கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட பிரதமர்!

பாகிஸ்தானில் டிக்டாக்கில் பிரபலமான பெண் ஒருவரை 400க்கும் மேற்பட்டோர் மானபங்கம் செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி பாகிஸ்தானின் சுதந்திர தினத்தை அந்நாட்டு மக்கள் உற்சாகமாகக் கொண்டாடினார்கள். அப்போது, லாகூரில் உள்ள Minar-e-Pakistan என்ற தேசிய நினைவுச் சின்னத்தில் பெண் டிக் டாக் பிரபலம் ஒருவர். அங்கு நடக்கும் நிகழ்வுகளை படமாக்கிக் கொண்டிருந்தார்.

அப்போது, யாரும் எதிர்பார்க்காத நிலையில், அங்கு திரண்ட கும்பல் அந்த பெண்ணை கட்டிப்பிடித்து அநாகரீகமாக நடந்து கொண்டது. மேலும், அப்பெண்ணையும், அவருடன் வந்த நண்பர்களின் உடமைகளை களவாடியும், ஆடைகளை கிழித்தும் அட்டகாசம் செய்துள்ளது அந்த கும்பல். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்த வீடியோ ஒட்டுமொத்த பாகிஸ்தானியர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானும், லாகூர் மாகாண முதல்வர் உஸ்மான் பஸ்தரும் உத்தரவிட்டுள்ளனர்.

தற்போது, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக குரல்கள் ஓங்கி வருகிறது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட அந்த பெண் ஆபாசமாக சில காட்சிகளை படமாக்கிக் கொண்டிருந்ததாக ஒரு தரப்பினரால் சொல்லப்பட்டுள்ளது குறிப்பிட்டத்தக்கது.