ஆப்கான் குண்டு வெடிப்பு - இதுவரை 73 பேர் பலி!

ஆப்கான் குண்டு வெடிப்பு - இதுவரை 73 பேர் பலி!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நேற்று மாலை இடம்பெற்ற இரண்டு தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் குறைந்தது 73 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

விமான நிலையம் அருகே ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்த நிலையில் குண்டு வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் இதனை உறுதி செய்துள்ளது.

இதில் 60 ஆப்கானிஸ்தான் பிரஜைகளும் 13 அமெரிக்க படை வீரர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.