இன்றைய ராசிபலன் 6 அக்டோபர் 2026

இன்றைய ராசிபலன் 6 அக்டோபர் 2026

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய வீடு அல்லது வேலை தொடர்பான பொறுப்புக்களை கவனமாக செய்து முடிக்கவும். சொத்து தொடர்பான விஷயங்களில் சில கருத்து வேறுபாடுகளில் நிலவும். இன்று பல புதிய திட்டங்களை தொடங்குவதற்கு பதிலாக ஏற்கனவே உள்ள, நல்ல திட்டங்களை கவனமுடன் செய்யவும். அளவுக்கு அதிகமாக சிந்திப்பது உங்களுக்கு சோர்வை தரும். இன்று உடல் ஆரோக்கியத்துடன் எளிமையான உணவு எடுத்துக் கொள்வதிலும் கவனம் செலுத்தவும். குடும்பத்தில் நல்லிணக்கம் நிலவும். இன்று உங்களுடைய வீட்டை சீரமைப்பது தொடர்பாக செலவுகள் அதிகரிக்கலாம்.

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று ஆலோசனைக் கூட்டம், முக்கிய வேலைகளை செய்வது தொடர்பாக பரபரப்பான நாளாக அமையும். உங்களுடைய பொறுப்புகளை தெளிவான திட்டங்களுடன் செய்து முடிக்கவும். இன்று காதல் அல்லது திருமண வாழ்க்கையில் உங்களுடைய எதிர்கால திட்டங்களை பகிர்வதால் உறவில் பலம் அதிகரிக்கும். ஊடகம், சந்தைப்படுத்துதல் போன்ற துறைகளில் உள்ளவர்களுக்கு பணவரவு சீராக இருக்கும். இன்று சிலருக்கு கழுத்து வலி, கண் எரிச்சல் செல்வம் போன்றவை தொந்தரவு தர வாய்ப்பு உண்டு.

மிதுனம் ராசி பலன்

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய திறமையான பேச்சு மற்றும் நம்பிக்கையான செயல்பாடு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும். இன்று உங்களுடைய வேலைக்கான திட்டங்களை தெளிவாக வைத்திருப்பதோடு, முந்தைய சாதனைகளை தெளிவாக விளக்குவதன் மூலம் உங்களுடைய மதிப்பு அதிகரிக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு அதன் மூலம் சம்பளம் அதிகம் கிடைக்கும். குடும்பத்திலும், பண வழக்கத்தை விட உங்களுடைய வார்த்தைகளுக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்கும். அதனால் அவசரப்பட்டு எந்த ஒரு கருத்துக்களையும் தெரிவிக்க வேண்டாம்.காதலில் சிறிய கருத்து வேறுபாடுகள் பெரிதாக்குவதை தவிர்க்கவும்.

கடகம் ராசி பலன்

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு தலைமை பொறுப்பு கிடைக்கும். சக ஊழியர்களின் வழிகாட்டுதல் மற்றும் ஆக்கப் பூர்வமான அணுகுமுறைகள் உங்களுடைய வெற்றிக்கு வழிவகுக்கக் கூடியதாக இருக்கும். இன்று உங்களுடைய உள்ளுணர்வை புரிந்து செயல்படவும். உங்களுடைய மன அமைதியை மேம்படுத்தும் செயல்களில் ஈடுபடவும். தியானம், அமைதியான நடை பயிற்சி மேற்கொள்ளவும். காதல் உறவில் உணர்வு பூர்வமான நானாக இருக்கும். இன்று சொத்து தொடர்பான விவாகாரம் அல்லது செலவு திட்டங்களை மதிப்பாய்வு செய்யவும்.

சிம்மம் ராசி பலன்

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று பணியிடத்தில் ஏற்படக்கூடிய கவனச் சிதறல்களில் இருந்து விலகி இருக்கவும். இன்று உங்களுடைய நிதானமான அணுகுமுறை உங்கள் வேலைகள் மற்றும் சிந்தனைகளை மேம்படுத்தும். இன்று உங்கள் துணையுடன் மென்மையான அணுகுமுறை மற்றும் அவர்களின் உணர்வுகளை புரிந்து நடந்து கொள்ளவும். பயணம் அல்லது உங்களுடைய சுய பராமரிப்பு தொடர்பாக எதிர்பாராத செலவுகள் ஏற்படும். உங்கள் காதல் அல்லது திருமணம் வாழ்க்கையில் துணைக்காக நேரம் ஒதுக்க தவறாதீர்கள்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய வேலையில் குழு பணி மற்றும் தொழில் முறை தொடர்புகள் மூலம் குறிப்பிடத்தக்க ஆதரவை பெறுவீர்கள். உங்களுடைய புதுமையான யோசனைகளுக்கு நிர்வாகத்தின் ஆதரவு மற்றும் பாராட்டு கிடைக்க வாய்ப்பு உண்டு. வேலைப்பளு அதிகமாக இருக்கக்கூடிய இன்று உங்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். இன்று சமூகத்தில் புதிய நபர்களின் தொடர்புகள் மனிதற்கு புதிய தெம்பை தரும். இன்றைய முதல் இடத்தில் உங்களுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கும். குடும்பத்தினருடன் சேர்ந்து செய்யக்கூடிய நிதி யோசனை உங்களுடைய பற்றாக்குறை ஏற்படுவதை தடுக்கும்.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய புதிய வியூக சிந்தனை மற்றும் துல்லியமான செயல் திறன், உங்களுக்கான மதிப்பை உயர்த்தும். மேலும் தொழில் தொடர்பான விஷயங்களில் முன்னேற்றத்தை சந்திப்பீர்கள். இன்று உங்களின் வேலை தரம் பிறரால் பாராட்டப்படும். இன்று வேலைப்பளுடன் அதிகமாக இருக்கும் இதனால், தலைவலி அல்லது சோர்வாக உணர்வீர்கள். வர்த்தகம், சட்டப்பணிகளில் இருப்பவர்களுக்கு திட்டங்கள் நிறைவேறும். இன்று நீண்ட கால திட்டமிடல., தொழில் ஒப்பந்தங்கள் தொடர்பாக நிதானமாக செயல்படவும்.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். திட்டமிடுவது மற்றும் முக்கிய முடிவுகள் எடுக்கும் விஷயத்தில் ஆழமாக சிந்தித்து செயல்படவும். குடும்பத்தினருடன் பயண திட்டங்கள் மற்றும் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் தொடர்பாக ஆலோசிப்பீர்கள். இன்று குடும்பத்தினருடன் சிந்தனைமிக்க உரையாடல்கள் நிகழும். இன்று எதிலும் திட்டமிடல் தேவை. இல்லையெனில் அன்றாடப் பணிகளை தேவையற்ற முறையில் கடினமாக்குவதைத் தவிர்க்கவும். அதிக மதிப்புள்ள முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் நிதி நிலைகளைத் தணிக்கை செய்ய வேண்டிய நாள். தேவையற்ற அலுவலக அரசியலிலிருந்து விலகி இருக்கவும். உடல் ஆரோக்கியத்திலும், உணவு விஷயங்களில் கவனமாக இருக்கவும். இன்று உங்கள் பலவீனங்கள் வெளிப்பட வாய்ப்புகள் உண்டு. இது உறவில் அதிக நெருக்கத்தை ஏற்படுத்தலாம். காப்பீடு, முதலீடு விஷயங்களில் கவனம் செலுத்தவும். வேலையில் உங்களின் அணுகுமுறை சில தேவையற்ற சிக்கலை ஏற்படுத்தலாம். துணையின் உணர்வுகளை புரிந்து செயல்படவும்.

மகரம் ராசி பலன்

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று வேலை தொடர்பாக சக ஊழியர்கள், வணிக கூட்டணி போன்ற விஷயங்களால் உங்களுடைய உறவில் வலுவடையும். நேரடியாக சில கருத்து வேறுபாடுகள் இனிய பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்க்க முடியும். தொழில் தொடர்பாக சில ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு. உடல் நலனில் அக்கறைத் தேவைப்படும் நாள். காதல் உறவில் பரஸ்பர நம்பிக்கை அதிகரிக்கும். கூட்டாளிகளின் ஆதரவு கிடைக்கும் என்பதால் மனதில் நம்பிக்கை அதிகரிக்கும்.

கும்பம் ராசி பலன்

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று நிலுவையில் உள்ள பணிகள் நிறைவேறுவது, நீண்ட நாட்களாக எதிர்பார்த்த செய்திகள் தேடிவருவது என சில நன்மைகள் நடக்கும். இன்று வேகத்தை விட உங்களுடைய ஒழுக்கமான செயல்பாடு முக்கியமானதாக இருக்கும். உங்கள் உணவு விஷயங்களில் கவனமாக இருக்கவும். உங்களுடைய சிந்தனை, செயல்பாடுகளில் நிலைத்தன்மையைக் கடைப்பிடிக்கவும். உங்களின் வீட்டுப் பொறுப்புகள் அதிகரிக்கும். காதல் விஷயத்தில் துணையுடன் நெருக்கம் அதிகரிக்கும். ஒழுக்கமான சேமிப்பை கடைப்பிடிக்கவும்.

மீனம் ராசி பலன்

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று சந்தைப் படுத்துதல், கலைத் துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் திறமை மீது நம்பிக்கை வைத்து செயல்படவும். உங்கள் உடலுக்கு தேவையற்ற அழுத்தத்தை கொடுப்பதை விடுத்து சுறுசுறுப்பாக செயல்படவும். உங்கள் துணையின் மனநிலையை மேம்படுத்தவும். ஊக வணிகம், ஆபத்தான முதலீடு விஷயங்களை தவிர்க்க வேண்டிய நாள். இன்று உங்கள் அன்புக்குரியவர்களுக்கு பரிசு பொருட்களை வாங்க ஆர்வப்படுவீர்கள். தனிமையில் இருப்பவர்களுக்கு ஒரு இனிமையான காதல் அனுபவத்தைப் பெறலாம்.