நாமலுக்கு தண்டனை கிடைத்தவுடன் களமிறங்கவுள்ள ராஜபக்ச குடும்பத்து பெண்மணி! அர்ச்சுனாவிடம் இருந்து கசிந்த இரகசியம்

நாமலுக்கு தண்டனை கிடைத்தவுடன் களமிறங்கவுள்ள ராஜபக்ச குடும்பத்து பெண்மணி! அர்ச்சுனாவிடம் இருந்து கசிந்த இரகசியம்

நாமல் ராஜபக்ச சிறையில் அடைக்கப்பட்டால் அவரது மனைவியும், குடும்பத்தினரும் அரசியலுக்கு வரக்கூடும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நாமல் ராஜபக்ச திருடியிருந்தால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

களமிறங்கும் நாமல் குடும்பம் 

அதேபோன்று, நிலக்கரி கொள்வனவு விவகாரத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் குமார ஜயகொடி மீதும் வழக்குத் தொடர வேண்டும். அவர் பெரிய தொகையை மோசடி செய்திருந்தால், அவரையும் கைது செய்து சிறையில் அடைத்து வழக்கு விசாரணைக்கு உட்படுத்த  வேண்டும். அவ்வாறு செய்தால் அதற்கு நாம் ஆதரவளிப்போம்.

நாமலுக்கு தண்டனை கிடைத்தவுடன் களமிறங்கவுள்ள ராஜபக்ச குடும்பத்து பெண்மணி! அர்ச்சுனாவிடம் இருந்து கசிந்த இரகசியம் | Namal Jailed Archchuna Warns Of Political Twist

சட்டம் அனைவருக்கும் சமமானது என்று ஜனாதிபதி கூறுகின்றார். ஆனால், நடைமுறையில் அவ்வாறு நடக்கின்றதா என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.

நாமல் ராஜபக்சவை சிறையில் அடைத்து, அவருக்கு எதிரான வழக்கு விசாரணையைத் துரிதப்படுத்துவதன் மூலம் அரசியல் ரீதியாக வெற்றி பெறலாம் என்று நீங்கள் நினைத்தால், அது உங்கள் விருப்பம்.

புலம்பெயர் தமிழர்களும் வடக்கு மக்களும் அதனால் மகிழ்ச்சியடையலாம். ஆனால், இதனால் ஏற்படப்போகும் அரசியல் விளைவுகளை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

நாமல் ராஜபக்ச சிறையில் அடைக்கப்பட்டால் அவரது மனைவியும் குடும்பத்தினரும் அரசியலுக்கு வரக்கூடும். அப்போது, அவருக்கு ஆதரவாக மக்கள் அணி திரளலாம். தற்போதுள்ள 159 ஆசனங்களைக் கொண்ட அரசாங்கத்துக்கு எதிராக, எதிர்காலத்தில் 180 அல்லது 200 ஆசனங்களைப் பெறும் அளவுக்கு அரசியல் நிலைமை மாறக் கூடும்.

எனவே, தயவு செய்து சிந்தித்துப் பாருங்கள். மக்களின் அரசியல் உணர்வுகளைச் சாதாரணமாக மதிப்பிட வேண்டாம். மக்களுக்கு எல்லாமே நன்றாகத் தெரியும். நாமல் ராஜபக்சவுக்கு எதிராக வழக்குத் தொடர்வது சரி என்றால், அதேபோன்று குமார ஜயகொடி மற்றும் பிமல் ரத்நாயக்க ஆகியோருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாமலுக்கு தண்டனை கிடைத்தவுடன் களமிறங்கவுள்ள ராஜபக்ச குடும்பத்து பெண்மணி! அர்ச்சுனாவிடம் இருந்து கசிந்த இரகசியம் | Namal Jailed Archchuna Warns Of Political Twist

 

அவர்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

சாட்சியங்களை மாற்றியமைத்து, நீதிபதிகளைக் குற்றவாளிகளாகச் சித்தரித்து, உண்மையில் பணம் பெற்றவர்கள் வெளியே இருக்கின்றனர் என்ற குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படுகின்றன. பணம் கொடுத்தவர்கள், பணம் பெற்றவர்கள் தொடர்பாகவும் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.

உங்களிடம் இன்று அதிகாரம் இருக்கலாம். ஆனால் அந்த அதிகாரத்தை எப்படிப் பயன்படுத்துகின்றீர்கள் என்பதைச் சிந்தியுங்கள். மருத்துவர்கள், பொறியியலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் நாட்டைவிட்டு வெளியேறிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அது குறித்து அரசாங்கம் போதிய கவனம் செலுத்துவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.