மன்னார் அரிப்பில் வரலாற்றுச் சின்னமாகத் திகழ்ந்த பிரித்தானிய ஆளுநரின் 'டோரிக் மாளிகை'!
இலங்கையின் மன்னார் கடற்கரையில் உள்ள அரிப்பில் இருக்கும் ஆளுநர் மாளிகை, முத்துக்குளிப்புத் தளத்திலிருந்து இரண்டு மைல் வடக்கே, 8° 47' வட அட்சரேகை மற்றும் 79° 40' கிழக்குத் தீர்க்கரேகையில் அமைந்துள்ளது.
இதன் வடிவமைப்பு முற்றிலும் டோரிக் கட்டடக்கலைப் பாணியில் உள்ளது.
இது இலங்கையின் முதல் பிரித்தானிய ஆளுநரான ஃபிரடெரிக் நோர்த் அவர்களாலேயே இது திட்டமிடப்பட்டு கட்டப்பட்டது.
இந்த மாளிகை புறத் தோற்றத்தில் அழகாக இருந்தாலும், சிறிய பரிமாணங்களைக் கொண்ட அறைகளையீடையது. இதன் உள்ளக வசதிகள், வெளிப்புறக் கட்டமைப்பின் கம்பீரத்திற்கும் நேர்த்திக்கும் முழுமையாகப் பொருந்தவில்லை; இருப்பினும், அவை எந்த நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டனவோ, அந்த நோக்கங்களை முழுமையாக நிறைவேறின.
தரைத்தளத்தில் ஒவ்வொரு மூலையிலும் ஒன்று என நான்கு சிறிய படுக்கையறைகள் உள்ளன; மையத்தில் விசாலமான கல் படிக்கட்டுகள் அமைந்துள்ளன; இருபுறமும் விசாலமான மண்டபங்களை கொண்ட இம் மாளிகையில் இருபுறமும் நேர்த்தியான தூண் வரிசைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்று உணவருந்தும் அறையாகப் பயன்படுத்தப்படுகிறது,
இருபது பேர் கொண்ட ஒரு குழுவை இங்கு தங்க வைக்கலாம். மற்றொன்று ஆளுநரின் படுக்கையறை.
அதன் ஒரு முனையில், ஒரு சுழல் படிக்கட்டு வெட்டப்பட்டுள்ளது, அது மொட்டை மாடிக்கு இட்டுச் செல்கிறது. அங்கிருந்து மூன்று திசைகளில் சமவெளியின் மிக விரிவான காட்சியும், நான்காவது திசையில் திறந்த கடலும், சிப்பிக் கரைகளிலிருந்து படகுகள் திரும்பும்போது அவற்றின் வரிசையின் அழகிய காட்சியும் தென்படுகின்றன.
இது கடலிலிருந்து ஒரு கல் எறியும் தூரத்தில், ஒரு மேடான கரையில் அமைந்துள்ளது; மேலும், தரை வரை எட்டும் வெனிசியக் கதவுகள் அல்லது ஜன்னல்களால் முழுமையாகச் சூழப்பட்டிருப்பதாலும், நிலக்காற்று மற்றும் கடல் காற்றுகளின் தொடர்ச்சியான சுழற்சியால் தொடர்ந்து காற்றோட்டம் இருப்பதாலும், அறைகள் மகிழ்ச்சியூட்டும் வகையில் குளிர்ச்சியாக இருக்கின்றன.
அதற்கு அருகில், மரத் தூண்கள் மற்றும் பனை ஓலைகளால் பல தற்காலிக அறைகள் கட்டப்பட்டுள்ளன. டோரிக் கட்டிடத்தில் தங்க முடியாத நபர்களுக்கு இவை தங்குமிட வசதியை அளிக்கின்றன.
அருகிலுள்ள பகுதி கணிசமான அளவிற்கு சமதளமாகவும், மணல் நிறைந்ததாகவும், தரிசாகவும் உள்ளது. அங்கு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை முட்கள் மற்றும் சப்பாத்திக் கள்ளிச் செடிகள் நிறைந்த தாழ்வான புதர்க்காடுகளைத் தவிர வேறொன்றும் தென்படுவதில்லை.
1902இல் அரிப்புக்கு பயணப்பட்ட ஆங்கில அரச அதிகாரியொருவர் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.
"பின்னர் நாங்கள் கடற்கரையோரமாக, மேலும் சுமார் 4 மைல் வடக்கே உள்ள அரிப்புவுக்குப் பயணம் செய்தோம். அங்கு, காலியாக இருந்த ஒரு அரசாங்கப் பங்களாவை ஆய்வு செய்யுமாறு நான் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தேன். அதில் நான்கு பெரிய, உயரமான அறைகளும், ஒரு அழகான அகன்ற வராண்டாவும், பெரிய சுற்றுச்சுவர் கொண்ட வளாகமும் இருந்தன. அதன் அருகே, பழைய டச்சு கோட்டையின் இடிபாடுகளின் சிதிலங்கள் இன்னும் காணப்பட்டன. கண்டி மன்னனிடம் 20 ஆண்டுகள் சிறைப்பட்டிருந்த பிறகு, 1679-ல் அனுராதபுரத்திலிருந்து தப்பித்து, நமது நாட்டுக்காரரான ராபர்ட் நாக்ஸ் அந்தக் கோட்டைக்குத்தான் சென்றடைந்தார். அந்த இடம் மற்ற விதங்களில் பொருத்தமாக இருந்திருந்தால், இந்த கோட்டையை ஒரு கடல்சார் உயிரியலாளருக்கு முற்றிலும் பொருத்தமான வசிப்பிடமாகவும் பட்டறையாகவும் மாற்றியிருக்க முடியும் - ஆனால் அது அப்படி இல்லை.
அரிப்பில், முத்து தொழில்களின் அறிக்கைகளில் அடிக்கடி குறிப்பிடப்படும் ஒரு உன்னதமான கட்டமைப்பான "டோரிக் இடிபாடுகளை" நாங்கள் பார்வையிட்டோம்; அதை நாங்கள் ஒரு அடையாளச் சின்னமாகப் பயன்படுத்தி வந்தோம். இது ஒரு நூற்றாண்டுக்கு முன்பு, ஆளுநர் முத்துக்குளிப்பை மேற்பார்வை செய்யச் செல்லும் போது தங்குவதற்கான அதிகாரப்பூர்வ இல்லமாக கில்ட்ஃபோர்ட் ( பிரட்டிக் நோர்த் அவர்கள் இப்பெயரால் அழைக்கப்பட்டார்.) பிரபுவால் கட்டப்பட்டது. ஆனால், பயன்படுத்தப்படாததால் பிற்காலத்தில் அது பாழடைந்து போனது. இருப்பினும், அது எப்போதுமே ஒரு பயனுள்ள மற்றும் கவனத்தை ஈர்க்கும் பொருளாக இருந்து வருகிறது."
அக்காலத்திலேயே அது சிதைவுகளுக்கு உள்ளான கட்டடம் என்பது தெளிவாக உள்ளது. மேலும் இதற்கருகே ஒல்லாந்தர் அமைத்த கோட்டையின் சிதைவுகள் காணப்பட்டன என்பது கூடுதல் தகவல்.
எழுத்தாக்கம்:- Antonyfernando Jeniefar