வரவு-செலவுத் திட்டம் மீதான குழு நிலை விவாதம் இன்று ஆரம்பம்
2027ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டம் மீதான குழு நிலை விவாதம் அல்லது மூன்றாம் வாசிப்பு நாடாளுமன்றத்தில் இன்று (21) ஆரம்பமாகியுள்ளது.
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நாடாளுமன்றம் காலை 9.30 மணிக்குக் கூடியுள்ளது.
இன்று ஆரம்பமான குழு நிலை விவாதம் டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில் அன்றைய தினம் மாலை 6.00 மணிக்கு மூன்றாம் வாசிப்பு மீதான இறுதி வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு
இதேவேளை, 2027ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு, நேற்று (20) நாடாளுமன்றத்தில் 97 வாக்குகள் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.
இந்த வரவு-செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக மொத்தம் 157 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்ததுடன் 60 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர்.

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக இருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நவம்பர் 12ஆம் திகதி வரவு-செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து, நவம்பர் 13ஆம் திகதி முதல் விவாதம் தொடங்கியது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சமர்ப்பிக்கும் மூன்றாவது வரவு-செலவுத் திட்டமான இது, இலங்கையின் வரலாற்றில் 81-ஆவது வரவு-செலவுத் திட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.