தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 4 வான்கதவுகள் திறப்பு

தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 4 வான்கதவுகள் திறப்பு

நிலவும் மழையுடனான வானிலை காரணமாக தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகள் தலா ஓர் அடி வீதம் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, தற்போது வினாடிக்கு 2,800 கன அடி நீர் தெதுரு ஓயாவிற்கு வெளியேற்றப்பட்டு வருவதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழையுடனான வானிலை காரணமாக நீர்த்தேக்கத்திற்குள் சேரும் நீரின் அளவைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இவ்வாறு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, நீர்த்தேக்கத்தை அண்மித்த மற்றும் அதன் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் காலங்களில் நீர்த்தேக்கத்திற்குக் கிடைக்கும் நீரின் அளவு மற்றும் மழைவீழ்ச்சிக்கு ஏற்ப வான் கதவுகள் திறக்கப்படும் அளவு மேலும் மாறுபடக்கூடும் என்பதால், நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவுகளினால் வெளியிடப்படும் அறிவிப்புகளுக்கு அமையச் செயற்படுமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.