ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்பு : கல்வி பிரதி அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்பு : கல்வி பிரதி அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் இன்று (23) ஆசிரியர் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், ஆசிரியர்களின் கோரிக்கைகளை கல்வி அமைச்சு நிராகரித்துள்ளது.

தனியான வாழ்க்கை செலவு கொடுப்பனவு மற்றும் மேலதிக சம்பள உயர்வு ஆகிய ஆசிரியர்களின் கோரிக்கைகளை அமைச்சு நிராகரிப்பதாக கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், அரச ஊழியர்களில் அதிகூடிய சம்பளம் பெறும் 10 பிரிவினரில் ஆசிரியர்களும் உள்ளடங்குவதாக கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

அரச ஊழியர்களில் அதிகூடிய சம்பளம்

2027 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் சம்பள உயர்வுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாகவும், கடந்த சில வருடங்களில் ஆசிரியர்களுக்குச் சுமார் 60 முதல் 80 சதவீதம் வரையான சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 

ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்பு : கல்வி பிரதி அமைச்சரின் அதிரடி அறிவிப்பு | Deputy Minister Says Teachers Salary And Allowance

இந்த சந்தர்ப்பத்தில் ஆசிரியர்கள் மேலதிக கொடுப்பனவுகளைக் கோருவது நியாயமற்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு இடையே நிலவும் சம்பள முரண்பாடு சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழுவின் ஊடாகத் தீர்க்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.

தேசிய எதிர்ப்பு நாள்

இவ்வாறான பின்னணியில் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பல தொழிற்சங்கங்கள் இணைந்து இன்றைய தினத்தைத் 'தேசிய எதிர்ப்பு நாளாக' பிரகடனப்படுத்தியுள்ளன.

 

ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்பு : கல்வி பிரதி அமைச்சரின் அதிரடி அறிவிப்பு | Deputy Minister Says Teachers Salary And Allowance

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், ஆசிரியர் மற்றும் அதிபர் சேவை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட வைத்தியர்களும் இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் இணைந்து கொள்ளவுள்ளனர்.