யாழில் ஒன்றுடன் ஒன்று மோதிய 4 வாகனங்கள் : சிறுவன் உட்பட மூவர் வைத்தியசாலையில்

யாழில் ஒன்றுடன் ஒன்று மோதிய 4 வாகனங்கள் : சிறுவன் உட்பட மூவர் வைத்தியசாலையில்c

யாழ்ப்பாணம் - பருத்தித்துறையில் இடம்பெற்ற விபத்தில் 4 வயது சிறுவன் உள்ளிட்ட மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை தும்பளை வீதியில் மணியாரம் சந்திக்கு அருகாமையில் நேற்று (22) மாலை 6.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பருத்தித்துறையில் இருந்து தும்பளை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி பருத்தித்துறை நோக்கி பயணித்த முன்று மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

மூவர் காயம் 

குறித்த விபத்தில் ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்த 4 வயது சிறுவன் படுகாயமடைந்துள்ளதுடன் அவரது தாய் மற்றும் தந்தையும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த நிலையில் காயமடைந்த மூவரும் சிகிச்சைகளுக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.