ஆகஸ்ட் மாதம் சுருக்கமடைந்த கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் - மத்திய வங்கி

ஆகஸ்ட் மாதம் சுருக்கமடைந்த கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் - மத்திய வங்கி

தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் இரண்டிற்குமான கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் சுருக்கமடைந்ததாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதற்கமைய, தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணானது முன்னைய மாதத்திலிருந்து 12.7 சுட்டெண் புள்ளிகளைக் கொண்ட வீழ்ச்சியுடன் ஆகஸ்ட் மாதம் 45.1 சுட்டெண் பெறுமதியொன்றினை பதிவுசெய்துள்ளது.

இது புதிய கட்டளைகள், உற்பத்தி, தொழில்நிலை மற்றும் கொள்வனவுகளின் இருப்பு துணைச் சுட்டெண்களில் காணப்பட்ட வீழ்ச்சியின் மூலம் பிரதானமாகத் தூண்டப்பட்டிருந்து.

கொவிட்-19 மேலும் பரவுவதனைக் கட்டுப்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மூலம், பணிகள் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் கடந்த மாதம் 46.2 வீதத்தினைக் கொண்ட சுட்டெண் பெறுமதிக்கு வீழ்ச்சியடைந்து.

புதிய வியாபாரங்கள், தொழில் நடவடிக்கை, தொழில் நிலை, நடவடிக்கைக்கான எதிர்பார்க்கைகள் துணைச் சுட்டெண்கள் வீழ்ச்சிகளைப் பதிவு செய்ததாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.