உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வு
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் சூழலின் நிலை காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர் அதிகரிப்பை சந்தித்துள்ளது.
அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கியதால், உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் விநியோகம் சென்றுவந்த ஹோர்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் போக்குவரத்தின் தேக்கம் இந்த நிலையை மேலும் அதிகரித்துள்ளது.
இதன்படி, இன்று பிரென்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 96.80 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.
கடந்த வார ஒப்பீடு

இது 0.54 சதவீதம் அல்லது 0.52 டொலர் அதிகரிப்பாகும். அதேவேளை, அமெரிக்காவின் WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 92.14 டொலராக உயர்ந்துள்ளதுடன், இது 0.72 சதவீதம் அல்லது 0.66 டொலர் அதிகரிப்பாகும்.
கடந்த வாரமும் எண்ணெய் விலையில் குறிப்பிடத்தக்க உயர்வு பதிவாகியிருந்தது.
அதன்படி, பிரென்ட் எண்ணெய் விலை 7.8 சதவீதமும், WTI எண்ணெய் விலை 10 சதவீதத்திற்கு அண்மித்த அளவிலும் அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.