4 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது
வெலிக்கடை காவல்துறை பிரிவுக்குட்பட்ட ராஜகிரிய முதலாவது வீதியில் சுமார் 4 மில்லியன் ரூபா மதிப்புள்ள ஐஸ் போதைப்பொருள் மற்றும் கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபரொருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோனஹேன காவல்துறை பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில்
29 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருளுடன் சந்தேக நபரை மேலதிக விசாரணைகளுக்காக போதைப்பொருள் தடுப்பு பிரிவிடம் ஒப்படைத்துள்ளனர்.
சினிமா செய்திகள்
கமல்ஹாசனை சந்தித்த தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர்
07 September 2026
Romanchakam (தெலுங்கு): திரை விமர்சனம்
06 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026