கொரோனா அச்சுறுத்தல் – உனவட்டுன ரயில் நிலையத்திற்கு தற்காலிக பூட்டு
உனவட்டுன ரயில் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
சுகாதார பிரவினரின் ஆலோசனைக்கு அமைவாக இன்று (திங்கட்கிழமை) அந்த ரயில் நிலையத்தை மூட தீர்மானித்ததாக அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் இருந்து ஹபராதுவ பகுதிக்குச் சென்ற நபரொருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
குறித்த நபருடன் உனவட்டுன ரயில் நிலைய அதிபர் தொடர்புகளை பேணியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, ரயில் நிலைய அதிபர் பி.சி.ஆர். சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், அவரை 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே உனவட்டுன ரயில் நிலையத்தை இன்று தற்காலிமாக மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உனவட்டுன ரயில் நிலையத்திற்கான கிருமி நீக்கல் நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்படவுள்ளடன், பதில் ரயில் நிலைய அதிபரை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.