பேருந்தில் ஏற முயன்ற பெண்ணை மோதிய பஸ்; பரிதாப பலி
மீரிகம பேருந்து நிலையத்தில் வைத்து பேருந்தொன்றில் மோதி பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் புதன்கிழமை (31) அன்று இடம்பெற்றுள்ளது.
அலவ்வ , மேல் புத்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய சுமனாவதி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் வியாழக்கிழமை (31) காலை தனது மகளுடன் ரேந்தபொல விகாரைக்கு வந்து வழிபாடுகளில் ஈடுபட்டு மீண்டும் அலவ்வ நோக்கி பயணிப்பதற்காக பேருந்தில் ஏறியுள்ளனர்.
இதற்கிடையில் அவரது மகள் பேருந்தில் இருந்து இறங்கி பணப் பரிமாற்ற இயந்திரத்திற்கு (ATM) சென்றுள்ளார்.
இந்நிலையில் பேருந்து புறப்பட தயாரானதால் பெண் பேருந்தில் இருந்து இறங்கி தனது மகளை வரவழைத்து அவளுடன் பேருந்தில் ஏற வந்துள்ளார்.
இதன்போது மகள் முதலில் பேருந்தில் ஏறியுள்ளதுடன் அதே நேரத்தில், நீர் கொழும்பிலிருந்து வந்த மற்றொரு பேருந்து 65 வயதுடைய பெண் மீது மோதியுள்ளது.
இதில் படுகாயமடைந்த குறித்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.