பிளாஸ்டிக் பை பயன்பாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்
பிளாஸ்டிக் பைகளின் இலவச விநியோகத்தைத் தடை செய்ததன் பின்னர், பிளாஸ்டிக் பை பயன்பாடு 50% குறைந்துள்ளதாக சுற்றுச்சூழல் பிரதி அமைச்சர் அன்டன் ஜெயகொடி தெரிவித்தார்.
2025 நவம்பர் 1 முதல் கடைகளில் பிளாஸ்டிக் பைகளுக்கு கட்டணம் வசூலிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சிவனொளிபாதமலை யாத்திரை காலத்தில், ஆண்டுதோறும் 100 டன்க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் கழிவு அந்த பகுதியில் குவிகிறது.
இதனை கட்டுப்படுத்த சிவனொளிபாதமலை பகுதியை “பிளாஸ்டிக் இல்லா மண்டலம்” ஆக அறிவிக்க அரசுத் திட்டமிட்டுள்ளது.
அங்கு பிளாஸ்டிக் உணவு உறைகள், ஒருமுறை பயன்படும் பாத்திரங்கள், 1 லீட்டருக்குக் குறைவான பிளாஸ்டிக் நீர் போத்தல்கள் கொண்டு செல்லவும் விற்பனை செய்யவும் தடை விதிக்கப்படும்.

பிளாஸ்டிக் கழிவுகளை சரியான முறையில் சேகரித்து அகற்றுவது கடை உரிமையாளர்களின் பொறுப்பு ஆகும்.
அத்துடன் பிளாஸ்டிக் கொண்டு வரும் யாத்திரிகர்களுக்கு அபராதம் விதிப்பதையும் அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர்.