தபால் மூல வாக்களிப்புக்கள் வவுனியாவில் ஆரம்பம்!
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலிற்கான தபால் மூல வாக்களிப்புகள் நாடாளாவிய ரீதியில் இன்றயதினம் ஆரம்பமாகி தொடர்ந்து இடம்பெறவுள்ளது.
அந்தவகையில் சுகாதார ஊழியர்கள் இன்றயதினம் தமது அஞ்சல் வாக்குகளை வவுனியா பிராந்திய சுகாதாரசேவைகள் பணிமனையில் செலுத்தினர்.
வாக்களிப்பு நடவடிக்கைகள் சுகாதார நடைமுறைகளைப்பேணி, சமூக இடைவெளியை பின்பற்றி இடம்பெற்றிருந்தமை குறிப்பிடதக்கது.
காலை 8 மணிமுதல் மாலை 4 மணிவரை குறித்த வாக்களிப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடதக்கது.