 
                            இளைய சகோதரனை கொலை செய்த நபர் கைது!
மாத்தளை காவல்துறை பிரிவுக்குட்பட்ட களுதாவளை பிரதேசத்தில் தமது இளைய சகோதரனைக் கூரிய ஆயுதத்தினால் தாக்கிக் rn
கொலை செய்த நபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் பலத்த காயமடைந்த குறித்த நபர், மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
களுதாவளை பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குடும்பத் தகராறு காரணமாக இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
கொலை செய்யப்பட்டவரின் பிரேத பரிசோதனை மாத்தளை வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படுகின்றது.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
 
                     
                                            