கொரோனா தொற்று சந்தேகம் - மூடப்பட்டது உனவட்டுன ரயில் நிலையம்

கொரோனா தொற்று சந்தேகம் - மூடப்பட்டது உனவட்டுன ரயில் நிலையம்

உனவட்டுன ரயில் நிலையத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர், கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட ஒருவருடன் பழகியிருந்ததை அடுத்து உனவட்டுன ரயில் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ இதை கூறியுள்ளார்.

மேலும் குறித்த நபர் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

குறித்த ஊழியரின் PCR பரிசோதனை அறிக்கை கிடைக்கும் வரை, உனவட்டுன ரயில் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் எனவும் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.