இராஜாங்கனைப் பிரதேசத்திற்கான தபால் மூல வாக்குப் பதிவு குறித்த அறிவிப்பு வெளியானது

இராஜாங்கனைப் பிரதேசத்திற்கான தபால் மூல வாக்குப் பதிவு குறித்த அறிவிப்பு வெளியானது

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இடைநிறுத்தப்பட்ட இராஜாங்கனைப் பிரதேசத்திற்கான தபால் மூல வாக்குப் பதிவு 14 நாட்களுக்கு பின்னர் நடைபெறும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

பிராந்திய பொலிஸ் அதிகாரிகளுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும்போதே தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், “கொரோனா பரவல் காரணமாக இடைநிறுத்தப்பட்ட ராஜாங்கனைப் பிரதேசத்தின் தபால் மூல வாக்குப் பதிவுகள் 14 நாட்களின் பின்னர் இடம்பெறும். அந்தப் பகுதியில் கொரோனா தாக்கத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் பின்னரே அங்கு வாக்குப் பதிவு இடம்பெறும்” என மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புகள் நேற்று முதல் ஆரம்பமாகி இடம்பெற்று வரும் நிலையில் அநுராதபுரம் நகராட்சி, ராஜாங்களை பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிக்கான வாக்களிப்பு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தது.

குறித்த பகுதியில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் நெருக்கடி காணப்படுகின்ற நிலையில் இந்த திடீர் முடிவு எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.