சூடு பிடிக்கும் சுதந்திரக் கட்சி மற்றும் பிரசன்ன ரணதுங்கவிற்கு இடையிலான மோதல்

சூடு பிடிக்கும் சுதந்திரக் கட்சி மற்றும் பிரசன்ன ரணதுங்கவிற்கு இடையிலான மோதல்

சுதந்திரக் கட்சியை தொடர்ச்சியாக அவமதிப்பது மற்றும் அவதூறான கருத்துக்கள் தொடர்பாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மீது நடவடிக்கை எடுக்கப்பட்டும் என அக்கட்சியின் உதவி தலைவர் பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், சுதந்திரக் கட்சியின் வழக்கறிஞர்கள் குழு தற்போது அவரது கருத்து தொடர்பாக ஆராய்ந்து வருகிறது எனக் கூறினார்.

மேலும் பிரசன்ன ரணதுங்க மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியுமா என்பது குறித்தும் அவர்கள் பரிசீலித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இருப்பினும் தமது தரப்பு அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளை மேற்கொள்ளாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.