கொரோனாவை வெற்றிகொள்ள ஜனாதிபதி வெளியிட்ட விடயம்
நாட்டினுள் ஏற்பட்டுள்ள கொவிட் 19 பரவல் அபாயத்தை கட்டுப்படுத்தி மக்களை பாதுகாக்கும் சாவாலில் வெற்றிபெறுவோம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
கொவிட் ஒழிப்பு ஜனாதிபதி செயலணியுடன் ஜனாதிபதி செயலகத்தில் இன்று பிற்கல் இடம்பெற்ற சந்திப்பின் போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கந்தகாடு போதைப்பொருள் புனர்வாழ்வு மையத்தில் அடையாளங்காணப்பட்ட கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளவர்களுடன் தொடர்பினை பேணியவர்களை இனங்கண்டு தனிமைப்படுத்தலுக்கு அனுப்புமாறும் ஜனாதிபதி இதன்போது அறிவுறுத்தியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.