ஊரடங்கு சட்டம் அமுலாகின்றதா? அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள தகவல்

ஊரடங்கு சட்டம் அமுலாகின்றதா? அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள தகவல்

ஊரடங்கு சட்டமோ அல்லது விடுமுறையோ நடைமுறைப்படுத்தவதற்கான எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அரச தகவல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தநிலையில் ஊரடங்கை அமுல்படுத்தவோ விடுமுறையை அறிவிக்கவோ, கைதுக்கான ஆணையை பிறப்பிக்கவோ அரசாங்கத்தினால் எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை.

இதேவேளை கந்தக்காடு நிலைய கொரோனா பரவலுக்கு பின்னர் நிலைமையை கட்டுக்குள் வைத்திருக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.