நெல் அறுவடைக்கு சென்ற குடும்பஸ்தர் பரிதாபமாக பலி!
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்னர்.
வெல்லாவெளி பிரதேசத்தில் 40 ஆம் கிராமம் வம்மியடி ஊற்று கிராமத்தை சேர்ந்த, 51 வயதுடைய நல்லையா நாகேந்திரன் என்ற 4 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,
நெல் அறுவடைக்காக உழவு இயந்திரத்தின் முன் பகுதியில், சாரதிக்கு அருகில் இருந்து வந்த வேளை தவறி விழுந்து, உழவு இயந்திரத்தின் சக்கரத்தில் சிக்குண்டு உயிரிழந்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பில் உழவு இயந்திரத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.