
யாழ்.கல்லுண்டாய் – மானிப்பாய் வீதியில் விபத்து! ஒருவர் காயம்!! வைத்தியசாலையில் அனுமதி
யாழ்.மானிப்பாய் – கல்லுண்டாய் வீதியில் மோட்டார் சைக்கிளும் முச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
குறித்த விபத்து நேற்று (04) மாலை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, யாழ்ப்பாணத்திலிருந்து கல்லுண்டாய் வீதி வழியாக சென்ற ஆட்டோவுடன் நேர் எதிரே வந்த மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.