புதிய கடற்படைத்தளபதிக்கும் ஜனாதிபதி கோட்டாபயவுக்கும் இடையில் சந்திப்பு

புதிய கடற்படைத்தளபதிக்கும் ஜனாதிபதி கோட்டாபயவுக்கும் இடையில் சந்திப்பு

இலங்கை கடற்படையின் புதிய தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பு  ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.

இதற்கு முன்னர் நிஷாந்த உலுகேதென்ன, கடற்படை தலைமை நிர்வாகியாக செயற்பட்டுள்ளார்.

நாட்டின் 23ஆவது கடற்படைத் தளபதியாக செயற்பட்ட பியல் டி சில்வா இன்று  ஒய்வு பெற்றதனைத் தொடர்ந்து, அவர் 24ஆவது கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.