பிரசார பணிகளில் ஈடுபடும் வேட்பாளர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பு
பொதுத் தேர்தல் காலப்பகுதியில் சிறுவர்களை வேட்பாளர்களின் பிரச்சார பணிகளுக்காக பயன்ப்படுத்துவதனை தவிர்த்துக்கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்ரிய தெரிவித்துள்ளார்.
சிறுவர்களை கொண்டு விளம்பர காணொளிகள் தயாரித்தல் சிறுவர்களை கொண்டு சுவரொட்டிகள் ஒட்டுவதற்கு பயன்ப்படுத்தல் என்பன தடை செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சிறுவர்களை இது போன்ற செயற்பாடுகளுக்கு பயன்ப்படுத்துவதனால் அவர்களின் ஆளுமை அற்றல் குறைவடைய அதிக வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.