ஸ்ரீலங்காவில் 3000 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்
ஸ்ரீலங்காவில் 16 மாவட்டங்களில் சுமார் 3000 பேர் வரை சுய தனிமைப்படுத்தலில் உட்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தை சேர்ந்தவர்களுடன் தொடர்பலிருந்தவர்கள் குடும்பத்தவர்கள் உட்பட 3000 பேரை சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
கம்பஹா, பொலன்னறுவை, காலி, கொழும்பு, குருநாகல், இரத்தினபுரி, களுத்துறை, கண்டி, அநுராதபுரம், யாழ்ப்பாணம், மொனராகலை, ஹம்பாந்தோட்டை, புத்தளம், மாத்தறை, மாத்தளை ஆகிய மாவட்டங்களில் இருந்தே இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
16 மாவட்டங்களில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர், எனவும் பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இராஜாங்கனையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.