நாம் உண்மைகளை மறைக்கின்றோமா? அனில் ஜாசிங்க பதிலடி

நாம் உண்மைகளை மறைக்கின்றோமா? அனில் ஜாசிங்க பதிலடி

நாட்டில் கொவிட் 19 தொடர்பான உண்மையான தகவல்களையே மக்களுக்கு வழங்கி வருகின்றோம் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

வைத்தியர் அனில் ஜாசிங்க இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சு உண்மைகளை மறைக்கின்றன என எதிர்கட்சியினர் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர்.

எனினும் புதிய நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்ட உடன் அதனை பகிரங்கப்படுத்துகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் உருவாகியுள்ள நோய் தொற்று காரணமாக சமூகத்துக்குள் நோயாளிகள் கண்டுபிடிக்கப்படும் போது உடனடியாக அதனை தெரிவிக்கின்றோம் என அனில் ஜசிங்க தெரிவித்துள்ளார்.