திடீரென விவாகரத்தை அறிவித்த இசையமைப்பாளர் டி.இமான்.. அதிர்ச்சியில் உறைந்த திரையுலகம்!

திடீரென விவாகரத்தை அறிவித்த இசையமைப்பாளர் டி.இமான்.. அதிர்ச்சியில் உறைந்த திரையுலகம்!

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்பவர் தான் டி.இமான். இவர் தற்போது அவரின் மனைவியை பிரிவதாக ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு ரசிகர்களிடையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “வாழ்க்கை நம்மை பல்வேறு பாதைகளுக்கு இட்டுச் செல்லும். அந்த வகையில் எனது மனைவி மோனிகா ரிச்சர்டும் நானும் சட்டரீதியாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டோம்.

இனி நாங்கள் கணவன்-மனைவி இல்லை. மேலும், எனது நலன் மீது அக்கறை கொண்டவர்கள், இசை ரசிகர்கள், ஊடகத்துறையினர் அனைவரும் எங்கள் தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பளித்து, வாழ்க்கையில் நாங்கள் முன்னோக்கிச் செல்ல உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

உங்கள் புரிதலுக்கும், அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி” என்று அவர் பதிவிட்டுள்ளார். டி.இமான்-மோனிகா ரிச்சர்ட் இருவருக்கும் கடந்த 2008ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.

இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்களின் விவாகரத்து தகவல் தமிழ் சினிமா ரசிகர்களிடையே அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.