கிளிநொச்சியில் பேருந்து-டிப்பர் வாகனம் மோதி விபத்து!

கிளிநொச்சியில் பேருந்து-டிப்பர் வாகனம் மோதி விபத்து!

பேருந்து ஒன்றுடன் டிப்பர் வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் பயணியொருவர் காயமடைந்துள்ளார்.

பச்சிளைப் பள்ளி பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட கரந்தாய் சந்திப் பகுதியில் இன்று (வியாழக்கிழமை) காலை இந்த விபத்து இடம்பெற்றது.

இதன்போது, கொழும்பில் இருந்து யாழ். நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து மீது பின்னால் வந்த டிப்பர் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த பயணியொருவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இச்சம்பவம் குறித்த விசாரணையை பளை பொலிஸார் முன்னெடுத்துள்ளார்.