நாட்டில் இதுவரை 1 இலட்சத்து 30 ஆயிரம் PCR பரிசோதனைகள்!
நாட்டில் இதுவரை 1 இலட்சத்து 30 ஆயிரம் வரையிலான PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, கடந்த பெப்ரவரி 18ஆம் திகதி முதல், நேற்று வரையிலான காலப்பகுதிக்குள், 1 இலட்சத்து 30 ஆயிரத்து 390 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்மூலம், நாட்டில் இதுவரை 2 ஆயிரத்து 674 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன், நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 1 ஆக காணப்படுகிறது.
இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 662 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், கொரோனா தொற்று குறித்த சந்தேகத்தின் அடிப்படையில், தற்போது 150 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.