
நீராடச் சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி மாயம்
உடதும்பர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீமுரே பிரதேசத்தில் உள்ள நீரோடை ஒன்றில் நீராடச் சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
நேற்று (23) பிற்பகல் காணாமல் போனவர், வேறு ஒரு குழுவினருடன் சுற்றுலாவுக்காக வந்துள்ள நிலையில் இந்த விபத்தில் சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காணாமல் போனவர் நீர்கொழும்பு திபிரிகஸ்கடுவ பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.
காணாமல் போன நபரை அப்பகுதி மக்கள் மற்றும் பொலிஸார் தேடி வருகின்றனர்.
உடதும்பர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.