4 ஆவது நாளாகவும் இடம்பெற்று வருகிற அஞ்சல் மூல வாக்களிப்பு
பொது தேர்தலுக்கு அமைவான அஞ்சல் மூல வாக்களிப்பு 4 ஆவது நாளாகவும் இன்று இடம்பெற்று வருகிறது.
காவல்துறை நிலையங்கள், சிவில் பாதுகாப்பு திணைக்களம், சுகாதார பிரிவுகள், மாவட்ட செயலாளர் காரியாலயங்களில் அஞ்சல்மூல வாக்களிப்புக்கள் இடம்பெற்று வருகின்றன.
இதேவேளை, சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ள அரச சேவையாளர்கள், அஞ்சல்மூல வாக்களிப்பில் பங்கேற்காமை குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
அவர்களுக்கு எதிர்வரும் 4 ஆம் திகதி அஞ்சல்மூல வாக்களிக்க முடியும் என கொழும்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தபோது அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல் கட்சிகளுக்கு எந்தவித நிறங்களும் பிரத்தியேகமாக ஒதுக்கப்படவில்லை.
தேர்தல்கள் ஆணைக்குழுவினால் கட்சிகளுக்கான பெயரும், இலட்சிணையும் மாத்திரமே பதிவுசெய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.