இரண்டு இளைஞர்களின் உயிரை காவு கொண்ட கோர விபத்து...!
மெதவச்சி-கெப்பித்திகொல்லாவ பிரதான வீதியில் எட வீரகொல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டு உந்துருளிகள் நேருக்கு நேர் மோதுண்டதாலேயே இந்த விபத்து இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளது.
சம்பவத்தில் இரண்டு உந்துருளிகளிலும் பயணித்த இளைஞர்களே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்த இருவரும் அநுராதபுரம் பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என காவல் துறை தெரிவித்துள்ளது.
இதன்பின்னர் அவலர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவத்தில் உயரிழந்தவர்கள் 21 மற்றும் 26 வயதுடைய எட வீரகொல்ல பகுதியை சேர்ந்தவர்கள் என காவல் துறை தெரிவித்துள்ளது.