தனியார் துறை பணியாளர்களின் ஊழியம் தொடர்பில் வெளியான தகவல்

தனியார் துறை பணியாளர்களின் ஊழியம் தொடர்பில் வெளியான தகவல்

தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பில் இணக்கம் காணப்பட்ட கால எல்லையை நீடிப்பதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக இணை அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த அவர்,

கொரோனா தொற்றினால் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மத்தியில் மே மற்றும் ஜூன் மாதங்களில் தொழிலின்மை காரணமாக பலர் வீடுகளில் தங்க வைக்கப்பட்டனர்.

அவ்வாறான நிறுவனங்களின் ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளத்தில் 50 வீதம் அல்லது 14,500 ரூபா ஆகிய இரண்டில் மிகவும் சாதகமான தொகையை செலுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சேவை வழங்குநர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் திறன்விருத்தி மற்றும் தொழில் உறவுகள் அமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இதற்கான இணக்கம் காணப்பட்டுள்ளது.

இந்த இணக்கப்பாட்டிற்கு அமைய தனியார் துறையினருக்கு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை குறித்த தொகையை செலுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.