இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் - தினேஷ் குணவர்தனவுக்கு இடையில் சந்திப்பு

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் - தினேஷ் குணவர்தனவுக்கு இடையில் சந்திப்பு

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி ச்சங்க் இற்கும், கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவுக்கும், இலங்கை பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான தொடர்பு மற்றும் மொழி கற்கைகளுக்கான வாய்ப்புகள் என்பன குறித்து இந்த கலந்துரையாடலின் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது கல்வி வாய்ப்புக்களை மேம்படுத்துவதன் ஊடாக உயர்கல்வித் துறைக்கு மேலும் நன்மைகளை பெற்றுக்கொள்வது தொடர்பிலும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.