துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலி
திக்வெல்ல, ஹிரிகெட்டிய கடற்கரையில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
நேற்று (04) இரவு இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரினால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட இடத்தில் சடலம் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், நீதவான் விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை இன்று (05) இடம்பெறவுள்ளது.
கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்ய விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.