வாகன விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி
தனமல்வில - உடவளவ வீதியில் 3ஆம் கட்டை பிரதேசத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பிக் கெப்ரக வாகனமொன்றும் முச்சக்கரவண்டியொன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவர் உயிரிழந்துள்ளனர்.
பதுளை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய் மற்றும் மகள் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கெப் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ள அதேவேளை, தனமல்வில காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.