மீனவரை காணவில்லை!
காலி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ”மதுஷன் புத்தா” என்ற மீன்பிடிப்படகில் கடலுக்குச் சென்ற மீனவரொருவர், கடலில் விழுந்து காணாமல் போயுள்ளார்.
நேற்று முன்தினம் (09) குறித்த படகு, கப்பலொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடலில் விழுந்த மீனவர்களில் 4 பேர் கப்பலில் இருந்த மீட்புக்குழுவினரால் காப்பாற்றப்பட்டுள்னர்.
எனினும், அவர்களில் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
அஹங்கம - குருல்லவல பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய மீனவரொருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
கடந்த 7ஆம் திகதி குறித்த மீன்பிடிப்படகு கடலுக்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.