டீசல் - பெற்றோல் தாங்கி ஊர்திகளை மறைத்து வைத்திருந்த நபர் தொடர்பில் விசாரணை

டீசல் - பெற்றோல் தாங்கி ஊர்திகளை மறைத்து வைத்திருந்த நபர் தொடர்பில் விசாரணை

ஐந்து நாட்களுக்கும் மேலாக பெற்றோல் மற்றும் டீசல் கொண்ட 4 தாங்கி ஊர்திகளை மறைத்து வைத்திருந்த எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

ஜா-எல - பமுனுகம பிரதேசத்தில் அனுமதியற்ற இடத்தில் குறித்த டீசல் மற்றும் பெற்றோல் தாங்கி ஊர்திகளை சந்தேகநபர் மறைத்து வைத்திருந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும், இது தொடர்பில் வத்தளை நீதிவான் நீதிமன்றுக்கு அறிவிக்கவுள்ளதாகவும் பமுணுகம காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.