நாட்டில் மேலும் 31 பேருக்கு கொவிட்: இருவர் உயிரிழப்பு

நாட்டில் மேலும் 31 பேருக்கு கொவிட்: இருவர் உயிரிழப்பு

நாட்டில் மேலும் 31 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது. இதன்படி, கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 662, 748ஆக உயர்வடைந்துள்ளது.

அதேநேரம், இதுவரை 6 42 ஆயிரத்து 530 பேர் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

இதேவேளை, மேலும் 2 கொவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளன.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் இன்று (13)  வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இதுவரை பதிவான கொவிட்-19 மரணங்களின் மொத்த எண்ணிக்கை 16, 424ஆக உயர்வடைந்துள்ளது.

இந்தநிலையில், 3, 724 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.