வீதி விபத்தில் சிக்கி சிறுவன் பலி!

வீதி விபத்தில் சிக்கி சிறுவன் பலி!

திருகோணமலை - ஹொரவ்பொத்தானை பிரதான வீதி நொச்சிக்குளம் பகுதியில், நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்தார்.

அத்துடன் 7 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலையில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த பாரவூர்தியை, முந்திச் செல்ல முற்பட்ட மகிழுந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானது.

நேற்றிரவு 7 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது, குறித்த மகிழுர்ந்தில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் காயமடைந்ததுடன், 5 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

காயமடைந்தவர்களில், உயிரிழந்த சிறுவனின் தாய் மற்றும் தந்தை ஆகியோருடன் மேலும் ஒருவரும், மஹதிவுல்வௌ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

அத்துடன் 4 பேர் மஹதிவுல்வௌ பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், விபத்து தொடர்பிலான விசாரணைகளை மொரவௌ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.