ரஷ்யாவில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12ஆயிரத்தை கடந்தது!

ரஷ்யாவில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12ஆயிரத்தை கடந்தது!

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12ஆயிரத்தை கடந்துள்ளது.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மொத்தமாக 12ஆயிரத்து 123பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

மேலும், உலகளவில் கொவிட்-19 தொற்றினால் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்த நான்காவது நாடான ரஷ்யாவில், ஏழு இலட்சத்து 59ஆயிரத்து 203பேர் வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 6,406பேர் பாதிப்படைந்துள்ளதோடு, 186பேர் உயிரிழந்துள்ளதாக ரஷ்யாவின் கொரோனா வைரஸ் நெருக்கடியை கண்காணிக்கும் மையம் தெரிவித்துள்ளது.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான இரண்டு இலட்சத்து 7ஆயிரத்து 707பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்களில் ஐந்து இலட்சத்து 39ஆயிரத்து 373பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுதவிர 2,300பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.