நாளை மேலும் 2 கப்பல்களில் இருந்து பெற்றோல் - டீசல் தரையிறக்கப்படும் - கஞ்சன விஜேசேகர
நாளை மேலும் 2 கப்பல்களில் இருந்து பெற்றோல், டீசலினை தரையிறக்கும் பணிகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் பதிவொன்றின் மூலம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த இரு தினங்களில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் டீசல் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நாடு முழுவதும் இன்று காலை முதல் 92,95 ரக பெற்றோல் விநியோகம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.