நிர்மாணத்துறையில் புரட்சியை ஏற்படுத்த பொறியியலாளர்களுக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி...!

நிர்மாணத்துறையில் புரட்சியை ஏற்படுத்த பொறியியலாளர்களுக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி...!

நகர மற்றும் கிராம மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் நிர்மாணத்துறையில் புரட்சியை ஏற்படுத்த ஒன்றிணையுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொறியியலாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

'குடிப்பதற்கும் பயிர்ச் செய்கைக்கும் நீரை பெற்றுக்கொள்வதில் உள்ள தடைகள் காரணமாக நாட்டின் பல பகுதிகளை சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குளங்கள் மற்றும் நீர்ப்பாசன கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன.

கிராமிய வீதி கட்டமைப்பின் அபிவிருத்தியும் துரிதப்படுத்தப்பட வேண்டும்.

மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற முடியாதிருப்பின் அபிவிருத்தி திட்டங்களில் எந்தப் பயனும் இல்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்திலிருந்து நாட்டை மீட்டெடுப்பதில் இளைஞர்களின் மீது நம்பிக்கை வைக்கப்பட்டது.

நிர்மாணத்துறையில் ஏற்படுத்த எதிர்பார்க்கும் புரட்சியிலும் உள்நாட்டு பொறியியலாளர்கள் மீது நம்பிக்கை வைப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வரலாற்றில் மிகச் சிறந்த பொறியியலாளர்கள் உருவாகிய யுகத்தை மீண்டும் உருவாக்க வேண்டுமென்று தெரிவித்துள்ளார்.