பால் உற்பத்தியில் இலங்கையை தன்னிறைவடைய செய்ய இந்தியா ஒத்துழைப்பு
பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களில் இலங்கையை தன்னிறைவு அடையச் செய்வதற்கான உதவிகளை வழங்க இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே உள்ளிட்ட குழுவினர் நேற்று (04) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து தமது இணக்கத்தை வெளிப்படுத்தியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, இலங்கையில் திரவ பால் உற்பத்திக்கு தேவையான தொழில்நுட்ப ஆதரவை வழங்குவதற்கு இந்தியாவின் தேசிய பால் அபிவிருத்தி சபையும் அந்நாட்டின் பால் நிறுவனமொன்றும் தீர்மானித்துள்ளன.