பாதீட்டில் அமைச்சுக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை குறைக்க தீர்மானம்!
இந்த ஆண்டுக்கான பாதீட்டில் அமைச்சுக்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகையை 5 சதவீதத்தினால் குறைக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
நேற்று (9) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டு்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரச உத்தியோகத்தர்கள், ஓய்வூதியம் மற்றும் இதர சேவைகளின் செலவுகளை சந்திப்பதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், சமுர்த்தி மற்றும் முதியோர் கொடுப்பனவுகள், ஓரிரு வாரங்கள் தாமதமாகும் என நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்றைய அமைச்சரவை சந்திப்பில் தெரிவித்ததாக அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்தார்.