ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் இணைத்துக்கொள்ளத் திட்டம்..!
தொடரூந்து திணைக்களத்தின் அதிகாரிகளுக்கும் அரச சேவைகள் ஆணைக்குழுவின் உத்தியோகத்தர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
இந்த சந்திப்பு இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளதாக தொடரூந்து திணைக்களத்தின் பொது முகாமையாளர் டபிள்யு ஏ . டீ . எஸ் குணசிங்க தெரிவித்துள்ளார்.
ஓய்வு பெற்ற தொடரூந்து திணைக்கள ஊழியர்களை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியில் இணைத்துக்கொள்வது தொடர்பிலேயே இந்த பேச்சுவாரத்தை இடம்பெறவுள்ளது.
தொடரூந்து திணைக்களத்தில் பணியாற்றிய 450 ஊழியர்கள் ஓய்வு பெற்றதை தொடர்ந்து நிலவிய வெற்றிடத்திற்கே குறித்த ஊழியர்கள் மீண்டும் ஒப்பந்த அடிப்படையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.
ஓய்வு பெற்ற 450 தொடரூந்து ஊழியர்களில் 400 ஊழியர்களை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் இணைத்துக்கொள்ள திட்மிட்டுள்ளதாக தொடரூந்து திணைக்களத்தின் பொது முகாமையாளர் டபிள்யு ஏ டீ எஸ் குணசிங்க தெரிவித்துள்ளார்.